இலங்கையை பிரிபடாத ஒரே நாடாக கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், மதச் சார்பற்ற ஒரு சமஷ்டி நாடாக மாற்றப்படுதல் வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும், இலங்கையை ஒன்றியமாக ஆக்கப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பினூடாக இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.