தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி-கமலுக்கு அடுத்த இடத்தை விஜய், அஜித் பிடித்துள்ளனர்.
இவர்களோடு விக்ரம், சூர்யா ஆகியோரும் தங்களுக்கான இடத்தை பிடித்துள்ளனர்.
இந்த 6 ஹீரோக்களும் முக்கியமாக கருதப்படும் நிலையில் இவர்களின் படங்கள் ஒரே ஆண்டில் வெளியானால் எப்படி இருக்கும்?
அதுவும் ஒவ்வொரு நடிகருக்கும் 2 படங்கள் வெளியானால், தமிழ் சினிமாவிற்கு அந்த ஆண்டு நிச்சயம் கொண்டாட்டமான ஆண்டாகத்தான் இருக்குமல்லவா?
தற்போது அந்த மகிழ்ச்சியான செய்தியைத்தான் பார்க்கப் போகிறோம்.
ரஜினி நடித்துள்ள 2.0 மற்றும் காலா ஆகிய 2 படங்களும் அடுத்த 2018ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேதிகள் இன்னும் உறுதியாகவில்லை.
அதுபோல் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய 2 படங்களும் 2018ல் ரிலீஸ் ஆகிறது.
இவர்களைப்போல் விக்ரம் நடித்து வருகின்ற துருவ நட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய 2 படங்களும் 2018ல் வெளியாகவுள்ளன.
சாமி 2 (சாமி ஸ்கொயர்) படமும் இந்தாண்டில் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் 2018 பொங்கலுக்கும் அடுத்து நடிக்கவுள்ள செல்வராகவன் படம் 2018 தீபாவளிக்கும் ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.
இந்த 4 ஹீரோக்களும் தலா 2 படங்களை கொடுக்கவுள்ளனர்.
ஆனால் விஜய் மற்றும் அஜித் ஒரு படங்களையாவது நிச்சயம் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது.
ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் 2018ல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
அதுபோல் அஜித்தின் ஏதாவது ஒரு படம் 2018ல் வெளியாகும் என நம்பலாம்.
இதுவரை அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்பதே கன்ப்யூஸ்னாகத்தான் உள்ளது என்பது வேறு கதை.