ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கி வரும் எந்திரன் படத்தின் 2 ஆம் பாகமான 2.0 படத்தின் ரிலீஸ் தேதியில் குழப்பம் நிலவியது. 2018 ஜனவரி 26 அன்று வெளியாகும் என்ற முந்தைய அறிவிப்புக்கு மாறாக, ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என்ற வதந்தி பரவியது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2.0 திரைப்படம் 2018 ஜனவரி 26 அன்று வெளியாவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சூர்யா, விக்ரம் போன்ற ஹீரோக்களை சற்றே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்பட்ட, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
2.0 படம் நிச்சயமாக 2018 ஜனவரியில் வராது என்ற நம்பிக்கையில் இவ்விரு படம் சம்மந்தப்பட்டவர்கள் அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டிய நிலையில் தற்போதைய தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே நேரம், ஒருவேளை 2.0 தள்ளிப்போனால் நம்ம படத்தை வெளியிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.