தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவு நண்பர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் மாதம் வெளியான ‘தாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக காலடி எடுத்து வைத்தவர் கண்ணன் ரங்கசாமி. இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாக ஒரே அறையில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஹீரோ சந்தோஷ் நாயகனாக நடித்திருந்தார்.
இப்படத்தின் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மிகவும் இளம் வயதில் இவர் இறந்தது திரையுலகத்தினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் சமீபகாலமாக பல இழப்புகளைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வந்த இந்த மறைவுச் செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.