தீவிரவாதத்துடன் தொடர்புடைதாக தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்டு சிரிய சிறையில் சித்திரவதை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட மூவருக்கு மத்திய அரசு மொத்தம் 31.3 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.
மூவரும் சிறையில் அடைக்கப்பட்டதற்கு மத்திய அரசும் துணை போனதாக கூறி, அப்துல்லா அலமல்கி, அகமட் எல் மாட்டி மற்றும் மொய்ட நுர்தின் ஆகிய மூவரும் 100 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
தங்களது நற்பெயர்கள் அழிக்கப்பட்டதுடன் தாங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனை உணர்ந்து மத்திய அரசு மொத்தம் 31.3 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக வழங்கியுள்ளது.