எண்ணை ஆலை ஒன்று தீப்பிடித்து இருந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
Haute-Vienne மாவட்டத்தின் தெற்கு பிராந்தியமான Meuzac நகரில் உள்ள ஒரு எண்ணை ஆலையே தீப்பிடித்துள்ளது. பாரிய சத்தங்களுடன் தொடர்ச்சியாக நீண்ட நேரம் இந்த ஆலை எரிந்துள்ளது. இதனால் கடும் கரும்புகை பரவியுள்ளது. அப்பகுதியில் ஆலையில் இருந்து 40 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு கரும்புகை பரவியது. குறித்த கரும்புகையே பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது என அப்பகுதியில் வசிக்கும் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்த இந்த தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை கிடைக்கப்பட்ட செய்திகளின் படி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவும், 24 மணிநேரங்கள் தேவைப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றியுள்ளனர். இதுவரை உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என்றபோதும், நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது