உங்கள் மனைவியின் கள்ளத்தொடர்பு தொடர்பாக வெளியான செய்திகளை நாங்கள் படித்துள்ளோம் என நடிகர் ஹிரித்திக் ரோஷனிடம், நடிகை கங்னா ரனாவத்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனக்கும் ரித்திக் ரோஷனுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அதை அவர் ரகசியமாகவே நீடிக்க விரும்பியதால் அவரை விட்டு விலகி விட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். மேலும், தனது நிர்வாண புகைப்படங்களை காதலன் ரித்திக் ரோஷனுக்கு அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கு ஹிரித்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கங்கனாவிற்கு ஆதரவாக அவரின் சகோதரி ரங்கோலியும் களத்தில் குதித்துள்ளார்.
கங்கனாவிற்கும், ஹிரித்திக் ரோஷனுக்கும் இடையே காதல் இருந்தது உண்மை. அவர்கள் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படம் போட்டோஷாப் அல்ல எனக் கூறியுள்ளார்.
மேலும் “உங்கள் முன்னாள் மனைவி உங்கள் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த வதந்திகளை நாங்கள் அனைவரும் படித்துள்ளோம்.
ஏன் எப்போதும் மனைவிக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்?” என ஹிரித்திக் ரோஷனிடம் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.