இனம் மற்றும் மதங்களுக்கிடையில் வேறுபாட்டை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருபோதும் இல்லை என அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
சபரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டை பிளவுபடுத்த எடுக்கப்படும் முயற்சிகளை தடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.