266 கிரேம் கேரளா கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சந்தேக நபரொருவரை நேற்று (26) மாலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிரதேசத்திலிருந்து பல மாதங்களாக நேரங்களை மாற்றியும்,வீதிகளை மாற்றியும் கேரளா கஞ்சா வியாபாரத்தில் முகவராக செயற்பட்டு வந்த
முச்சக்கர வண்டியை கன்னியா -துவரங்காடு சந்தியில் வைத்து சோதனையிட்ட போது முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த சித்தீக் என்றழைக்கப்படும் சலாஹூதீன் முகம்மது ஹனீபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.