தேசிய மீலாதுன்னபி விழா இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
யாழ். முஸ்லிம் மக்களின் பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கில் இம்முறை மீலாத் விழாவை யாழ்ப்ப்பாணத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
யாழ். உஸ்மானியா கல்லூரியில் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி இந்த தேசிய மீலாதுன்னபி விழா இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.