வவுனியா உக்குளாங்குளம் சிவன் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மாதா சிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக ஆலயங்கள் , தேவாலயங்களின் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.