உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை ஆகிய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் குழு தனியான ஒரு கட்சியில் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எது எப்படிப் போனாலும், இத்தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கூட்டணியாக போட்டியிட மாட்டாது எனவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.