மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தெரிவு செய்யும் தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்தின் படி தேர்தல் வலயங்கள் உருவாக்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்காக நவம்பர் 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான ஆவணங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட வேண்டும் என எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.