கனடா – ரொறொன்ரோவைச் சேர்ந்த மருத்துவர் எனச் சந்தேகிக்கப்படும் 19 வயது யுவதி ஒருவரை, முறையற்ற வகையில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தினை (பிளாஸ்ட்டிக் சேர்ஜரி) செய்த குற்றத்திற்காக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதி வீடு ஒன்றில் நிலத்திக் கீழ் அமைக்கப்பட்டிருந்த அறை ஒன்றில் வைத்து பெண் ஒருவருக்கு அண்மையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையினை செய்து வைத்துள்ளார்.
எனினும் இருவாரங்களின் பின்னர் சிகிச்சை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு தொற்று நோய் ஏற்பட்டு வேறு ஓர் மருத்துவரிடம் சென்று மீண்டும் ஒட்டுறுப்பு அறுவையினை செய்து கொள்ள வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து வரும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இவ்வாறாக உரிமம் பெறாத மருத்துவர்களை நம்பி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், தகுதியான மருத்துவர்களிடம் மாத்திரம் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.