அட்லி இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படம் மெர்சல்.
இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.
எனவே இப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து 2500க்கும் மேற்ப்பட்ட இணையத்தளங்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் மெர்சல் படம் இணையத்தில் வெளியானால் அந்த சம்பந்தப்பட்ட இணையதள முகவரியை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.