பிரித்தானியாவைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் ஒருவர் தனக்கு மனைவி ஒருவர் கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளமையானது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் ஆரம்பித்துள்ள குறித்த சிறுவன், தான் வாழ்கின்ற இன்றைய சூழ் நிலையில் தனக்கு ஒரு மனைவி கிடைத்தால் மட்டும் போதுமானது என்ற கருத்தினையே முன்வைத்துள்ளார்.
Channel 5’s Gypsy Kids எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோதே மேற்படி கருத்தினை குறித்த சிறுவன் முன்வைத்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
எக்ஸெஸ் பகுதியில் ஜெக் ஜோய் என்ற சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துளார். இந்த நிலையில், தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும், அவ்வாறான சூழ்நிலை தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளதோடு இந்தக் காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் (நடமாடும் வாகனக் குடியிருப்பு) ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார்.