கிளிநொச்சி இரணைதீவுப் பகுதி மக்கள் வாழ்விடஙகளை அளவீடு செய்யும் பணிக்குச் செல்லும் நில அளவைத்திணைக்கள ஊழியர்களிற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இதுவரையில் கிடைக்கப்பெறவில்லையென சுட்டாக்காட்டப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவில் வசித்த 167 குடும்பங்களும் 92ம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டம் மட்டுமன்றி நாலா புறமும் சிதறி வாழும் நிலையில் இன்றுவரையும் குறித்த தீவிற்குச் சென்று மீளக குடியமரமுடியாத நிலமையே கானப்படுகின்றது. இதனால் குறித்த தீவில் வசித்த 167 மக்களின் வாழ்விடங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி அந்த மக்கள் முழங்காவில் கடற்படைத் தளத்தின் முன்பாக தொடர்போராட்டம் நடாத்தி வரும் சூழலில் அவர்களை சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துவதற்கு ஏதுவாக அவர்களின் குடியிருப்பு பகுதிகளை இனம் கண்டு அளவீடு செய்வதற்காக கடந்த மாதம் 14பேர் கொண்ட குழு கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவ்வாறு சென்ற குழுவினர் அங்கே மக்கள் வாழ்வதில் பெரும் இடர் இருப்பதாக தெரியவில்லை எனவும் அதனால் அப்பகுதிகளை முழுமையாக அளவீடு செய்து அவற்றை காணி உரிமையாளர்களிற்கு பங்கீடு செய்து வழங்கினால் எஞ்சிய பணியை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினர்.
அவ்வாறு 167 குடும்பங்களின் நிலங்களையும் முழுமையாக அளவீடு செய்து வழங்குவதானால் தமக்கு 15 தினங்கள் தேவையெனவும் அதற்காக தினமும் அங்கு சென்று வருவதும் இயலாத காரயம் என்பதனால் தீவிலேயே தங்கி நின்று அளவீட்டை மேற்கொள்ள நில அளவைத்திணைக்களம் அனுமதி கோரியிருந்த்து.
இதற்கமைய நாளை 9ம் திகதியில் இருந்து ஒருவாரம் தீவில் தங்கி படிபுரிவதற்கான அனுமதிகோரி திணைக்கள் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் ஊடாக பாதுகாப்பு அமைச்சிற்கு வின்னப்பித்திருந்தனர். எனினும் குறித்த அனுமதியானது இன்றுவரை கிடைக்கவில்லையென மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த நிலத்தின் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். –