நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த காலநிலை மாற்றம் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.