திரையரங்க டிக்கெட் உயர்வு குறித்து முன்னணி நடிகர்கள் பேசுவார்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரசன்னா பதிலளித்திருக்கிறார்.
தமிழக அரசு திரையரங்க கட்டணத்தை 25% உயர்த்தி இருக்கிறது. இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். முன்னணி நடிகர் யாராவது இதைப் பற்றி பேசுவார்களா என்று பலரும் குரல் எழுப்பினார்கள்.
அக்கேள்வி ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கும் விதமாக பிரசன்னா கூறியிருப்பதாவது:
எந்த பெரிய படத்தைச் சேர்ந்தவர்களும் பேசப் போவதில்லை ஏனென்றால் எப்படியும் அவர்கள் படம் ஓடிவிடும். இது சிறிய படங்களுக்கு மட்டுமே சாபமாக இருக்கும். இந்த பிரச்சினையை நினைத்து கவலையாக இருக்கிறது.
10 வருடங்கள் கழித்து விலை உயர்வை நியாயப்படுத்துகிறோம் என்றால் பார்க்கிங், உணவு பண்டங்கள் விலையை நியாயமாக குறைக்க வேண்டும். எல்லோருக்கும் பேராசை. யாருக்கும் லாபத்தை விட்டுத்தர மனமில்லை. இது துறையைக் கண்டிப்பாக சாகடிக்கும்.
ரசிகர்களை திரையரங்குக்கு கொண்டு வர வழிகள் தேடிக்கொண்டிருக்கும்போது அவர்களை அங்கிருந்து விலக்கி வைக்க விஷயங்கள் நடக்கின்றன. கலகம் பிறந்திருக்கிறது. விடிவு?
இவ்வாறு பிரசன்னா தெரிவித்திருக்கிறார்.