பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இம்மாதம் 30 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவாதத்துக்காக பாராளுமன்றம் முழுவதும் 30, 31, 01 ஆம் திகதிகளில் அரசியலமைப்புச் சபையாக மாறும். விவாதத்தின் பின்னர் அறிக்கை, சட்டவரைவை தயாரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென உத்தேச அரசியலமைப்பு வழிகாட்டல் குழு உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.