முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியிடம், ஊழல் மற்றும் ஒட்டுக்கேட்டல் முறைகேடுகள் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவேண்டும் என பிரெஞ்சு தேசிய வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது.
இந்த தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஊடங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிக்கோலா சர்கோஷி ஜனாதிபதியா இருக்கும் போது ‘செல்வாக்கு வர்த்தகம்’ (தனது பதவியை பயன்படுத்தி) மற்றும் ‘தொழில்முறை இரகசியத்தை மீறியது’ போன்ற குற்றச்சாட்டுககுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பான சர்கோஷி விளக்கமளித்திருந்தாலும், மேலதிக குற்றச்சாட்டுக்களுக்கு மீண்டும் விளக்கமளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் ஒட்டுக்கேட்டல் ஆகிய இரு பிரிவுகளில் இந்த வழக்கு இடம்பெற உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2014 ஜூலையில், சர்கோஷி மீது விசாரணைகள் இடம்பெற்றிருந்தது வாசகர்கள் அறிந்ததே. 2016 ஆம் ஆண்டில் அனைத்து விசாரணைகளும் முடிவுற்றிருந்தாலும், மீண்டும் சில மேலதிக விளக்கங்களை சர்கோஷி அளிக்கவேண்டும் என Le Parquet national financier (PNF) கோரியுள்ளது.