அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம், வேதியியல் ஆகிய பிரிவுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் நிகழ்ச்சி நார்வே நாட்டில் நடந்தது. அதில், தேர்வுக்குழு தலைவர், இந்தாண்டுக்கான நோபல் பரிசை அறிவித்தார். அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்தார். ’ஐகேன்’ (ICAN -International Campaign to Abolish Nuclear Weapons) அமைப்பு என்பது தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிராகப் போராடி வருகிறது. இந்த அமைப்பு 10 வருடங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. தற்போது ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.