கடுமையான செய்திகளுடன் தனது நாட்டு படை தளபதிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தி வந்த நிலையில் கடுமையான செய்திகளுடன் படைத் தளபதிகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைகளுக்கான விசாரணையின்போது
அமெரிக்க கப்பற்படை மூத்த அதிகாரி ஜோசஃப் டன்போர்ட் ”பாகிஸ்தானின் உளத்துறை அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது.
கடந்த ஏழு வருடங்களாக பாகிஸ்தானின் நடவடிக்கையில் மாற்றத்தை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் நடவடிக்கையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை “என்றார்.
”பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அரசாங்கம் வகுத்த வெளியுறவு கொள்கைகளின்படி இயங்காமல் தனக்கென தனியாக வெளியுறவு கொள்கைகள் வகுத்து இயங்குகிறது.
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு வளைந்து கொடுக்கிறது” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மட்டீஸும் கடுமையாக சாடியிருந்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் குழப்பவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்று கோபமாக தெரிவித்தார்.
தாலிபன்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதை கண்டித்து அமெரிக்கா தனது விரக்தியை காண்பித்து வந்தது.
முன்னதாக அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆசிஃப் பேசும்போது, பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானை ஏற்க முடியாது என்று அமெரிக்கா கூறியதை கடுமையாக சாடினார்.
70 வருடம் நட்புக் கொண்ட நாட்டிடன் இது பேசும் முறை அல்ல என்று ஆசிஃப் கடிந்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டீல்லர்சன் மற்றும் ஜிம் மட்டீஸ்ஸை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.