சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.
அறிக்கை
குழந்தைகள் ஆயுதங்கள் ஏந்துவது தொடர்பான அறிக்கையை ஐ.நா., பொது செயலர் தயாரித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசுக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்த அறிக்கை ஐ.நா.,வுக்கு கிடைத்துள்ளது. இங்கு நடக்கும் மோதலால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். காஷ்மீரில் பதற்றம் ஏற்படும் போதும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
பள்ளிக்கு தீவைப்பு
இந்திய அரசின் அறிக்கைப்படி, காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 30 பள்ளிகளுக்கு தீவைத்தனர். நான்கு பள்ளிகளை ராணுவ பயன்பாட்டுக்காக பாதுகாப்பு படையினர் பல வாரங்கள் பயன்படுத்தி கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.