கடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியலில் வடகொரியா விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் ராணுவ வலிமையைக் கொண்டு வட கொரியாவை மிரட்டுபவர்களே, அந்நாட்டின் ஆயுத பலம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
மிரட்டல் அதிகரிக்க அதிகரிக்க வட கொரியா தனது ஆயுத பலத்தைப் பெருக்கிக் கொண்டே செல்வதாகவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். எனவே, ஆணு ஆயுத பலம் உள்ளிட்ட ராணுவ பலத்தை வட கொரியா பெற இத்தகைய நாடுகளே காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.