கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளைக் கட்டுப்படுத்த புதிய நவீன தொழில் நுட்ப முறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பலர் உயிரிழக்க நேரிட்டது. இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில், யானைகளை விரட்டியடிக்கும் தொழில் நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
அதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.