சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக முதன்முதலாக, சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். அறிமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா.’ இந்தப் படத்தில் நாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.
‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் முதல் பாடலான ‘கலக்கு மச்சான்…’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை விதைக்கும் விதமான வரிகளைக் கொண்டுள்ளது இந்தப் பாடல். இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் லிரிக்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகத் திரையுலகில் தலை காட்டாமல் இருந்த சிம்பு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். பீப் சாங் சர்ச்சைக்குப் பிறகு அனிருத்தும் சிம்புவும் இணைந்திருக்கிறார்கள்.