அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மூலம் அமெரிக்க நாணயத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 153.39 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ரூபாவின் பெறுமதியை நிலையாக வைத்திருப்பதில் இலங்கை மத்திய வங்கி கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.