புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்த மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் கருத்துக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் வெளிப்படையானதாக அமைய வேண்டும்.
சமஷ்டி முறைமைக்கு நாட்டை நகர்த்த கூடிய வகையில் பல்வேறு விடயங்கள் மற்றும் சொற்கள் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம தம்மானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.