இலக்கியத்துக்கான நோபல் பரிசு லண்டனைச் சேர்ந்த கஸோ இஷிகுரோவுக்கு வழக்கப்பட்டுள்ளது
சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (வியாழக்கிழமை) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய கஸோ இஷிகுரோ (62) பெறுகிறார்.
கஸோ ஆங்கிலத்தில பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். கஸோவின் முதல் புத்தகமான A Pale View of Hills – 1982 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
தனது சமீபத்திய நாவலில் விஞ்ஞான புனை கதை பாணியை கஸோ அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இதுவரை எட்டு நாவல்களை கஸோ எழுதியிருக்கிறார்.
ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிரெஞ்சு மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழியிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
கஸோ நாவல்கள், சிறுகதைகள் மட்டுமல்லாது A Profile of Arthur J. Mason, The Saddest Music in the World போன்ற பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார்.