கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ராணுவ அணிவகுப்பை பார்வையிட இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்.
இந்தோனேஷிய ராணுவம் உருவாக்கப்பட்டதன் 72வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிலேகோன் என்ற துறைமுக நகரில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க அதிபர் ஜோகோ விடோடோ பாதுகாவலர்களுடன் காரில் கிளம்பினார். வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையிலேயே அதிபர் வாகனம் நிறுத்தப்பட்டது. 30 நிமிடம் ஆகியும் நெரிசல் தீராததால், காரில் இருந்து இறங்கிய அவர், தனது பாதுகாவலர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட்டனர். அந்நாட்டின் போலீஸ் தலைவரும் நடந்து சென்றார்.
கோஷம்:
பாதுகாவலர்களுடன் அதிபர் நடந்து சென்றதை பார்த்த பொது மக்கள் அவரின் பெயரை சொல்லி கோஷம் போட்டனர்.