2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி மற்றும் ஊடக அமைச்சு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2018ஆம் ஆண்டுக்கான வரவு–செல வுத் திட்டம் அடுத்த மாதம் 9 ஆம் திகதி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு விசேட நிபுணத்துவத்துடனான அதிகாரிகளை கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர் வரும் 15ஆம் திகதி வரைக்கும் கருத்துகள் பெற்றுக்கொள்ளப்பட வுள்ளமை குறிப்பிடத் தக்கது.