‘மெர்சல்’ 20 ஓவரில் 300 ரன்கள் அடிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. படமே டி20 கிரிக்கெட் போட்டி மாதிரி இருக்கும் என்று இயக்குநர் அட்லீ பேசினார்.
‘மெர்சல்’ நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ பேசுகையில், ” ‘தெறி’ திரைப்படம் 50 ஓவரில் 300 ரன்கள் அடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், மெர்சல் 20 ஓவரில் 300 ரன்கள் அடிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. படமே டி20 கிரிக்கெட் போட்டி மாதிரி இருக்கும்.
ரஹ்மான் சாரிடம் தமிழுக்காக ஒரு பாடல் உருவாக்கலாம் என்று கூறி உருவாக்கிய பாடல் தான் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல். கிராமத்து இளைஞராக வரும் கதாபாத்திரத்தில்தான் மாஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். இதுவரை நானே பார்க்காத விஜய்யைப் பார்க்கிறேன் என்று விஜய்யே சொன்னார்” என அட்லீ பேசினார்.