ஏ.ஆர். ரஹ்மான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். ஏ.ஆர். ரஹ்மான் (அல்லா இரக்கா இரகுமான்) 1966ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஆர்.கே.சேகர் என்பவரது ஒரே மகனாவார். ரஹ்மான் ஒன்பது வயதாயிருக்கும் போதே அவர் தந்தை காலமானார். அதனால் மிகவும் கஷ்டப்பட்ட இவர்கள் குடும்பம் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தது. இந்நிலையில் ரஹ்மானின் சகோதரி ஒரு விசித்திர நோயினால் தாக்கப்பட்டார். அந்நோயை சூஃபி துறவி ஒருவர் தீர்த்து வைத்தார். அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார் திலீப் என்ற பெயர் கொண்ட அல்லா ராகா ரஹ்மான்.
வரும் ஒக்டோபர் 20,மற்றும் 21 ஆம் திகதி கனடாவில் ரொறொண்டோ நகரில் சிறப்புற இடம்பெறவுள்ளது A.R ரஹ்மான் சிறப்பு இசை நிகழ்ச்சி.