முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு எதிராக நேற்று (07) கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பௌத்த விவகாரம் தொடர்பில் உதவி செய்யப் போய்த்தான் இவர்களுக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சகல குற்றச்சாட்டுக்களையும் இவர்கள் மீது சுமத்தியே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கேகாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.