எப்போதும் இந்திய நிறுவனங்களை உலக நாடுகளில் இருக்கும் நிறுவனத்துடனேயே ஒப்பிடுவதால், அதன் சிறப்பும் மகிமையும் தெரியாமல் போகிறது. உலகநாடுகள் குறித்தும் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைத் தெரிந்துவைத்திருக்கும் நமக்கு இந்திய நிறுவனங்கள் பற்றி எந்த அளவிற்குத் தெரியும் என்றால்.. சற்றுக் குறைவு தான். சரி, சொல்லுங்க பார்ப்போம் இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனம் எது..?
இந்தியா நிறுவனங்கள் இந்திய வர்த்தகச் சந்தையில் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய 76 இந்திய நிறுவனங்கள் குறித்து நமக்குத் தெரியாத விஷயங்களைச் சேகரித்துத் தமிழ் சிஎல்எஸ்ஏ நிறுவனம் நமக்குக் கொடுத்துள்ளது.
இந்தியாவிலேயே 3,00,000 த்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனம் என்றால் இது டிசிஎஸ் மற்றும் கோல் இந்தியா தான்.
இந்தியாவின் 40 சதவீத ஊழியர்கள் நிதியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறார்கள்
IPCA லேப்ஸ் என்னும் நிறுவனத்தின் பிரேம்சந்த் கோதா தான் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மிகவும் வயதான தலைமை செயல் அதிகாரி.
டிசிஎஸ் நிறுவனத்தில் தான் அதிகமான பெண் ஊழியர்கள் உள்ளது. அதுவும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 34 சதவீதம் என்பது சாதாரண விஷயமில்லை.
ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சராசரி சம்பள அளவுகள் கணக்கிடப்படும். இது பொதுவாக ஏறுமுகத்திலேயே இருக்கும், ஆனால் 2017ஆம் நிதியாண்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தில் ஊழியர்கள் சராசரி சம்பளம் 1.5 சதவீதம் சரிவடைந்தது.
இந்திய சந்தையில் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிப்பது டெக்னாலஜி மற்றும் நிதியியல் துறை சார்ந்த நிறுவனங்கள் தான்.
2017ஆம் நிதியாண்டில் இந்திய வர்த்தகச் சந்தையில் பெண்களின் பங்கீடு 21.6 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக உயர்ந்தது.
2017ஆம் நிதியாண்டில் 70க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கை 274 பக்கங்களாக இருந்தது.
2017ஆம் ஆண்டில் மட்டும் யெஸ் வங்கி சுமார் 20,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இது இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் செய்யாத ஒன்று. மேலும் இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் சுமார் 34 சதவீதம் அதிகமாகும்
2017ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தையிலேயே நீளமான அதாவது 460 பக்கங்கள் கொண்ட மிக நீளமான வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டீர்ஸ்.
நீளமான அறிக்கையை வெளியிட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒருபுறம் இருக்கும் நிலையில், மறுபுறம் கோல் இந்தியா வெறும் 140 பக்கம் கொண்ட மிகச் சிறிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் 500 நிறுவனங்களில் ஊழியர்கள் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு 2.7 மில்லியன் ரூபாயாக இருக்கும் நிலையில் எச்டிஎப்சி ஒரு ஊழியருக்கு 32மில்லியன் ரூபாய்ப் பெறுகிறது.
2017ஆம் நிதியாண்டில் கனரா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் விஜயா வங்கியில் 5 சதவீதம் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுத்துறை வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Demonetisation என்ற வார்த்தையைச் சுமார் 61 நிறுவனங்கள் தங்களுது வருடாந்திர அறிக்கையில் சுமார் 469 முறை பயன்படுத்தியுள்ளது. இதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டும் 29 முறை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பிழப்பு போலவே ஜிஎஸ்டி என்பதையும் 56 நிறுவனங்கள் சுமார் 351 முறை பயன்படுத்தியுள்ளது.இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் 26 முறை பயன்படுத்தி இருந்தது.
தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனத்தின் சராசரி ஊழியர்கள் மத்தியிலான சம்பள வித்தியாசம் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் 731 மடங்கா இருந்தது. பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்பிஐ வங்கியில் 2.5 மடங்காக இருக்கிறது.
இந்தியா சந்தையில் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது நிர்வாக அதிகாரிகளுக்குக் குறைவான சம்பளம் 3 மில்லியன் ரூபாய். இந்தச் சம்பளம் எஸ்பிஐ, பாங்க ஆஃப் பரோடா, கார்பரேஷன் பேங்க்.
இந்தியாவில் செய்யப்பட்ட ஆடை விற்பனையில் 9 சதவீதம் இணையத்தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் 30 சதவீதம் ஆடை விற்பனை என்பது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் நிதியாண்டில் Calcutta Electric Supply Corporation அல்லது சிஈஎஸ்சி நிறுவனத்தின் 28.5 சதவீத வாடிக்கையாளர்கள் இணையதளத்தின் மூலம் தங்களது கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். இது 2016ஆம் நிதியாண்டில் 17.2 சதவீதமாக இருந்தது. முக்கியமாக இந்நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பிவிஆர் நிறுவனத்தின் திரைப்பட ஆன்லைன் டிக்கெட் பதிவுகளின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் மொத்த பதிவுகளில் 45 சதவீதமாக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆக்சிஸ் வங்கி வழங்கப்பட்ட கடன் எண்ணிக்கை 66 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏசியன் பெயின்ஸ் நிறுவனத்திற்குத் தேவையான மொத்த ஆற்றில் 22 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துள்ளது.
சர்வதேச நாடுகளில் பயன்படுத்தி வரும் டோட்டா அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை மாரிகோ நிறுவனம் பயன்படுத்தித் தனது விற்பனையை மேம்படுத்தியுள்ளது. இதன் பயன்பாட்டின் மூலம் சுமார் 350 மில்லியன் ரூபாயை சேமித்துள்ளது மாரிகோ.