தனது தொலைபேசி இலக்கதினை பல பெண்களுக்கு வழங்கியிருந்தமை காரணமாக சொந்த காதலியையே அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத வினோதமான சோகக் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகேகொட பகுதியிலுள்ள பிரபல உணவு விடுதி ஒன்றில் வேலை செய்து வந்த அழகான கிராமபுர இளைஞன் ஒருவர் தனிமையை போக்கிக் கொள்வதற்காக உணவு விடுதிக்கு வரும் இளம் பெண்களுக்கு தன்னுடைய தொலைபேசி இலக்கத்தினை வழங்கி வந்துள்ளார்.
அந்த இழளைஞனுடன் காதல் வயப்பட்ட ஒரு இளம் பெண் தொடர்ச்சியாக மூன்று மாதம் கையடக்க தொலைபேசியினுடாக உறவை வளர்த்துள்ளனர்.
ஒருநாள் காதலனை நேரடியாக சந்திக்க ஆசைப்பட்ட குறித்த யுவதி காதலனுக்கு அறிவிக்காமலேயே சிறிய பரிசுடன் குறித்த உணவு விடுதிக்கு சென்றுள்ளார்.
அதனை அயறியாத காதலன் குறித்த யுவதியை அடையாளம் கண்டுக்கொள்ளாமல் உணவு பரிமாறியுள்ளதோடு வழமையான பாணியில் தனது தொலைபேசி இலக்கத்தினை கொடுத்துள்ளார்.
இந்த செயலால் அதிர்ச்சியுற்ற அந்த இளம் பெண் தனக்கு கொடுத்த தொலைபேசி இலக்கத்தை கசக்கி அவர் மீது எறிந்ததோடு தனது கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தி அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.