பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை ராவல்பிண்டி தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதில், “இந்த வழக்கில் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு 17 வருடம் சிறை தண்டனை அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தெஹ்ரிக் ஐ தாலிபன் இயக்கத்தின் ஐவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007இல் முன்னாள் பிரதமர் பெனாசிர் புூட்டோ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முஷாரப் கடந்த ஆண்டு முதல் டுபாயில் வசித்து வருகிறார்.