ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் திகதியில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பார் மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது எனவும், செப்டெம்பர் 2 ஆம் திகதி சனிக்கிழமை என்பதால் அன்றைய தினத்தில் மேலதிக விடுமுறை தேவையில்லை எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.