பஸ் போக்குவரத்தின் முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று(29) பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற வீதியின் ஆயுர்வேத சந்தி ஊடாக பொரளை வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தற்போது காலி வீதியில் பஸ் போக்குவரத்திற்காக முன்னுரிமை ஒழுங்கை திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகே கூறினார்.
அதேவேளை பாராளுமன்ற வீதியில் பஸ் போக்குவரத்தின் முன்னுரிமை ஒழுங்கை இன்று(29) முதல் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையான காலப்பகுதியில் செயற்படுத்தப்படும் என்று பேராசிரியர் அமல் குமாரகே கூறியுள்ளார்.