ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாட்டை இரத்தினபுரியில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
இரத்தினபுரி, சீவலி விளையாட்டு மைதானத்தில் குறித்த இந்த மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது.
இரத்தினபுரியில் நடைபெறும் 71 ஆம் ஆண்டு மாநாட்டின் பின்னர், மாவட்ட மட்டத்திலான கூட்டங்கள் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடத்தப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது மாநாட்டுக்கு, பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.