நிதானமாக இருக்கும் இளைஞன் ஓட்டை படகிலும் பயணம் செய்து தன்னை காத்து கொள்வான் – நிதானம் இல்லை எனில் புதிய படகிலும் பயணிக்க முடியாது – நாமாக தேடிக்கொள்ளும் கொலைகளும் ,கொடுமைகளும் இவைதான் – பணத்துக்காக இளைஞர்களுக்கு மதுபானத்தையும் ,போதைப்பொருட்களையும் அள்ளிகொடுக்கும் அனியாயம் செய்வோரை என்ன செய்ய அவனின் தேடலை திசை திருப்பும் ஜீவஜந்துகளை என்ன செய்வோம் ?
இங்கே யாரும் கேள்வி கேட்காதீர்கள் – இவங்களுக்கு என்ன நினைவில் வாங்கி குடிக்கிறார்கள் ,பயன்படுத்துகிறார்கள் என்று ? முடியும்வரை இப்படித்தான் செய்யவேண்டும் என நினைத்து திட்டமிட்டு செய்யப்படும் சமூக அழிப்பில் இது முக்கியமானது – ஒரு இளைஞனை ,பருவ வயதை அடைந்த ஆண்மகனை இந்த விடயங்களில் மிக இலகுவாக மடக்கி ஆளமுடியும் ,உளவியல் அறிவிலும் ,ஆழ்ந்த சமூக அறிவிலும் இதை உறுதியாக கூறமுடியும் .
மனிதன் வாழ்வியலில் அவனில் பருவ நிலைகளே அடுத்த படி நிலைகளுக்கு களமிடுகின்றது அவை சரியாக அமைவது அவன் கடந்துபோகும் சமூகத்தின் சமகால சூழ் நிலை மட்டும்தான் – எமது சமகால சூழல் நிதானமற்ற நிலையில் இருக்கின்றது – இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி எம் இனத்தையும் கலாச்சாரத்தையும் ,ஆன்மீகத்தையும் கண்டிப்பாக அவர்களுக்கு விதைத்தே ஆகவேண்டும் – சங்ககால சமூக நிலை பக்தியையும் ,பக்தி இலக்கியங்களையும் கொண்டு வந்தமைக்கு காரணம் சமூகத்தில் ஏற்பட்ட இப்படியான ஒழுக்க வழுக்கள்தான் ,பரத்தை ஒழுக்கம் மேலோங்கி போகும் போதும் சமூக பிறழ்வுகள் தலைதூக்கும் போதும் காலம் காலமாக் ,விழிப்புணர்வும் ஆன்மீகமும் கடைப்பிடிக்கப்படுகின்றது ,ஆன்மீகம் பெயர்பெற்ற எம் பகுதிகளில் எம் பெறுமதிமிக்க இளைய சமூகம் கண்முன் அழிவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது தயவு செய்து பெற்றோரும் ,பெரியோரும் உண்மையோடு களமிறங்கி எங்கள் எதிர்காலத்தை உரமாக்க பாடுபடுங்கள் – ஒன்றுபட்டு உழையுங்கள் எங்களை நாங்களே காப்போம்