அரசு மகா சங்கத்தினரின் பேச்சுக்கு செவிசாய்க்காது செயற்படுகின்றது என்று முன்னாள் முதலமைச்சரும் கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மகா சங்கத்தினரின் ஆதரவு இல்லாமல் போயுள்ளது. சிறி ல.சு.க. யின் அமைச்சர்கள் உள்ள இந்த அரசில் தேரர்களின் தலை வெடிக்க அடிக்கின்றனர். இந்த அரசில் 68 தேரர்கள் அரசியல் பழிவாங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேரர்கள் சொல்வதை இந்த அரசு கேட்கிறதா? அஸ்கிரிய மகா நாயக்க தேரர் விஜேதாச ராஜபக்சவை நீக்க வேண்டாம் எனக் கூறினார். அவர் திருடர் அல்ல என்றும், அவர் நாட்டுக்காக செயற்பட்ட ஒருவர். பௌத்த மதத்துக்காக குரல் கொடுத்த ஒருவர் எனவும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர் கூறினார்.
இதுதான் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையா?- என்றார்.