அரச உத்தியோகத்தர்களைச் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று தேசிய தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் அரசியல் ரீதியான தலையீடுகள், அரசியல் ரீதியான நியமனங்கள், தொழிற்சங்கங்களின் தலையீடுகள் காரணமாக பணிகளைத் திறம்பட முன்னெடுக்க முடியாத இக்கட்டான நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால் பொதுமக்களும் அரச உத்தியோகத்தர்கள் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர். பணிகளைச் சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அனைத்து ஆவணங்கள் மற்றும் திறமைகளைக் கருத்தில் கொண்டு அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.