தமது பதவியைத் தக்க வைப்பதற்காக வும் புதிதாகப் பதவியைப் பெறுவதற் காகவும் எனது கணவன் மீது பொய்க் குற்றச்சாட்டுச் சுமத்த வேண்டாம் என்று தார்மீகக் கோபத்துடன் சீறிச் சினந்தார் புளொட் அமைப்பிலிருந்து உயிரிழந்த ஊத்தை பவான் என அழைக் கப்படும் கந்தையா செல்வராசாவின் மனைவி செ.யோகராணி.
‘‘எனது கணவர் புளொட்டில் இருந்த காலத்தில் எவரையும் கொலை செய்யவில்லை. அது எனக்கு நன்கு தெரியும். தமது பதவியைத் தக்கவைக்கவும் புதிதாகப் பதவியைப் பெற்றுக்கொள்ளவும் சிலர் குழப்பமான – உண்மைக்குப் புறம்பான கதைகளை எனது கணவர் இறந்த நிலையில் கூறுவதை நான் கண்டிக்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார் யோகராணி.