கொரியா மொழி திறன் பரீட்சைக்காக தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு வேறு ஒரு தினத்தில் பரீட்சையை நடாத்த கொரிய மனிதவள பிரிவு தீர்மானித்துள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக பரீட்சைக்கு தோற்றுவதற்கு முடியாமல் போன விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டிருந்தன.
அந்த விண்ணப்பதாரிகளுக்காக மாத்திரம் புதிய தினம் ஒன்றில் பரீட்சை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த விண்ணப்பாதாரிகளுக்கு வழங்கப்படும் மாற்று தினங்கள் தொடர்பான விபரங்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் என அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.