பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சுபைர் அஹமத் தலையில் பந்துதாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கட் உலகையே துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் மர்டான் என்ற கழகத்திற்கு விளையாடும் பக்ஹர் சமான் கிரிக்கட் கழகத்தை சேர்ந்த சுபைர் உள்ளூரில் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது பவுன்சர் பந்து அவரது தலையை தாக்கி இறந்துள்ளார்.
இதற்கு முன் அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் பில் ஹியூஸ் தலையில் பந்து தாக்கி மரணித்து இருந்தமை முக்கிய அம்சமாகும். இதனால் கிரிக்கட் விளையாடும் அனைவரும் தம்மை முழுமையாக பாதுகாக்கும் வகையில் தற்காப்பு கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் பணிவோடு வேண்டிக்கொள்கிறோம்.