சர்ச்சைக்குரிய சைட்டம் நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக பாதிப்பு எற்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக அதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரச வைத்திய அதிகரிகளின் சங்கம் (GMOA)அழைப்பு விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக குறித்த அந்த அமைப்பு ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள திறந்த கடிதம் ஒன்றினை வெளியிட்டு அதில் பிரதான மூன்று தரப்பினர் மீது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி சைட்டம் நிறுவனத்தில் கற்கின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், அரச பல்கலைக்கழகங்களில் வைத்திய பீடத்தில் கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், மருத்துவ சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வியை நிறைவு செய்து விட்டு திரும்பியுள்ள வௌிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகிய தரப்பினர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிக்கும் விடயம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.