தொண்டைமானாறு அக்கரை உல்லாசக் கடற்கரை வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அக்கரை க.தொ.சங்கம், தொண்டைமானாறு க.தொ.சங்கம் மற்றும் அப்பகுதி மாதர் சங்கத்தினர் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த அக்கரை உல்லாசக் கடற்கரை அப்பகுதியில் அமைந்ததன் காரணமாக பல கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாகவும் அதற்து எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.