நீர்கொழும்பு குரண சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இனந்தெரியாத குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து இடைவிலகிய ஒரவர் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று (12) பிற்கபல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவொலின்றிற்கு அமைய, வேன் ஒன்றை சோதனையிட்ட வேளையில், குறித்த வேனிலிருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.